தன்னை பற்றி அவதூறு செய்திகளை பரப்புவர்களுக்கு ரவி மோகன் விடுத்த எச்சரிக்கை

ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.மத்தியஸ்தம் முன்னிலையில் மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்தது.
தன்னை பற்றி அவதூறு  செய்திகளை  பரப்புவர்களுக்கு ரவி மோகன் விடுத்த எச்சரிக்கை
Published on

கடந்த சில வாரங்களாக நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து மத்தியஸ்தம் முன்னிலையில் மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்தது.

நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது ஆர்த்தியிடம் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என வழக்கை தொடர்ந்தார். அதை தொடர்ந்து ரவி மற்றும் ஆர்த்தி தரப்பில் இருந்து அவர்களது தரப்பு நியாயங்களை அறிக்கையாக வெளியிட்டு வந்தனர்.

இதுதொடர்பான அறிக்கையை இனிமேல் விடக்கூடாது என உயர் நீதிமன்றம் கூறியது. இந்நிலையில் ரவி மோகன் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் ரவி மோகனின் திருமண சர்சையை குறித்த அவதூறு செய்திகள் இடம் பெற்றுள்ள அனைத்து போஸ்டுகளையும் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என கூறியுள்ளார். அது ஃபேஸ்புக், எக்ஸ், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் என அனைத்து தளங்களுக்கும் இது பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி நீக்கவில்லை என்றால் அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com