இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரவி மோகன் - கெனிஷா!

பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரவி மோகன் - கெனிஷா!
Published on

ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 13 பந்தில் 31 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் குவித்தார்.

இப்போட்டியை நடிகர் ரவி மோகன் - கெனீஷா ஆகியோர் நேரில் கண்டு களித்தனர். இது தொடர்பான புகைப்படத்தை ரவி மோகன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com