Rashmika Mandanna| இந்த அத்துமீறலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது... எச்சரிக்கை விடுத்த ராஷ்மிகா

கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் விஷம பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொது வாழ்க்கையில் வரும் விமர்சனங்களை நான் ஏற்றுக்கொண்டேன்.
Rashmika Mandanna| இந்த அத்துமீறலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது... எச்சரிக்கை விடுத்த ராஷ்மிகா
Published on

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் தனது காதலர் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இந்தியா முழுவதும் சென்று ரசிகர்களை சந்திக்க உள்ளனர்.

இதற்கிடையில் ராஷ்மிகா மந்தனாவின் தாயார் சுமன் மந்தனா சுமார் 8 வருடங்களுக்கு முன்பு பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. அதில், ராஷ்மிகா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டியின் நிச்சயதார்த்தத்தின் போது ஏற்பட்ட சில சிக்கல்கள் குறித்து அவரது தாயார் பேசுவதாகக் கூறப்படுகிறது.

இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், "அந்த ஆடியோ பதிவை 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் நீக்க வேண்டும். இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என ராஷ்மிகா மந்தனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் விஷம பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனது பேச்சுகள் சூழலுக்குப் புறம்பாக மாற்றப்படுவதையும் நான் சொல்லாத விஷயங்கள் தவறான கதைகளாக ஜோடிக்கப்படுவதையும் நான் பார்த்திருக்கிறேன். பொது வாழ்க்கையில் வரும் விமர்சனங்களை நான் ஏற்றுக்கொண்டேன்.

ஆனால் சமீபத்தில் நடந்த இந்த அத்துமீறலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் அந்த ஆடியோ பதிவை நீக்க வேண்டும். இல்லையென்றால்சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com