ஜனநாயகன் படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கும் புஸ்ஸி ஆனந்த்?

ஜனநாயகன் தான் விஜயின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுகிறதுபோராட்டக்காரர் வேடத்தில் புஸ்ஸி ஆனந்த் நடித்துள்ளதாக கூறப்படுகிறது .
ஜனநாயகன் படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கும் புஸ்ஸி ஆனந்த்?
Published on

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இந்நிலையில், விஜயின் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ஜனநாயகன் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போராட்டக்காரர் வேடத்தில் புஸ்ஸி ஆன்ந்த் நடித்துள்ளதாக கூறப்படுகிறது .

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com