ஜனநாயகன் வழக்கை வாபஸ் வாங்கும் பட நிறுவனம் - ரிவைசிங் கமிட்டியை அணுக முடிவு

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார். தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
ஜனநாயகன் வழக்கை வாபஸ் வாங்கும் பட நிறுவனம் - ரிவைசிங் கமிட்டியை அணுக முடிவு
Published on

நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜன நாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இவ்வழக்கு தனி நீதிபதியின் விசாரணை அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இரு நீதிபதிகள் உத்தரவை அடுத்து நீதிபதி ஆஷா மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்.

இந்நிலையில், ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் வழக்கைத் திரும்பப் பெற்று, தணிக்கை குழுவின் ரிவைசிங் கமிட்டியை அணுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிவைசிங் கமிட்டியிடம் செல்வதா அல்லது வழக்கை தொடர்வதா என்பது குறித்த இறுதி முடிவை பட தயாரிப்பு நிறுவனம் நாளை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com