

பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இத்திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பிரேமலு 2 திரைப்படம் உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்தது. ஆனால் சில சூழ்நிலைக்காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரிஷ் ஏ.டி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார். படத்தின் தலைப்பை பத்லஹம் குடும்ப யுனிட் என வைத்துள்ளனர்.
இப்படத்தை ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், ஷியாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இது ஒரு காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாக இருக்கிறது. படத்தின் எழுத்தாளர் கிரிஷ் ஏ.டி மற்றும் கிரண் ஜோசி. ஒளிப்பதிவு: அஜ்மல் சஜு, இசை: விஷ்ணு விஜய், படத்தொகுப்பு: ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் மேற்கொள்கின்றனர்.
செப்டம்பர் மாதம் தயாரிப்பு தொடங்கும் என்று அறிவித்துள்ளனர்.
Bethlehem Kudumba Unit, a Romantic tale starring Nivin Pauly & Mamitha Baiju in the lead.Production kicks off this September. Stay Tuned for Updates !#BethlehemKudumbaUnit #NivinPauly #MamithaBaiju #BhavanaStudios #GirishAD @NivinOfficial @_mamithabaiju pic.twitter.com/zH32Cq1Nys