'டிராகன் - 2' பட அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்!

டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.2 டிராகன் படம் கொண்ட புகைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.
'டிராகன் - 2' பட அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்!
Published on

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ரூ.100 கோடி வசூலை கடந்து இப்படம் சாதனை படைத்தது.

இந்நிலையில், டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 'டிராகன்- 2' பட அப்டேட்டை பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார். 2 டிராகன் படம் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து விரைவில் என்று பிரதீப் ரங்கநாதன் பதிவிட்டுள்ளார்.

அதே போல், டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பதிவில், "டிராகன் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. Self made star பிரதீப் ரங்கநாதனுடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. மீண்டும் ஒருமுறை இந்த காம்போ ஒன்றிணையவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com