இன்று மாலை 4.46-க்கு அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு வரும் - பார்த்திபன்

பார்த்திபனின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பதிவை கண்ட ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருகிறாரோ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்று மாலை 4.46-க்கு அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு வரும் - பார்த்திபன்
Published on

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவர் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனுஷுடன் பணியாற்றியது குறித்த நடிகர் பார்த்திபன் கூறுகையில், 'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன். Mr தனுஷுடன் பணியாற்றும் முதல் அனுபவம். கிடைத்த மிகக் குறுகிய அவகாசத்தில் முற்றிலும் ரசித்தேன் அவரை ஒரு முழுமையான கலைஞனாக... என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதாவது பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில்,

Friends..

இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது.

உஷார்!!! என்று கூறியுள்ளார்.

இந்த பதிவை கண்ட ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருகிறாரோ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ, அப்படி என்ன அறிவிப்பு வெளியாகும் என்பது குறித்து யூகித்து பதிவிட்டு வருகின்றனர். பார்த்திபனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com