நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்'

இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.
நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும்  'ஒண்டிமுனியும் நல்லபாடனும்'
Published on

திருமலை புரொடக்ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் எழுதி இயக்கிய படம் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்'. இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.

கொங்கு வட்டார பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் 'பரோட்டா' முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கவுசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெ.டி.விமல் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' படம் திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு நாளை ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. நாளை முதல் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் கண்டு களிக்கலாம். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com