`எத்தனை தடைகள் வந்தாலும் உங்களின் அன்பு என்னை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கிறது' - கமல்ஹாசன்

மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
`எத்தனை தடைகள் வந்தாலும் உங்களின் அன்பு என்னை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கிறது' - கமல்ஹாசன்
Published on

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8.01 மணிக்கு தொடங்கியது. கமல்ஹாசன் படங்களில் இப்படம் மிகப்பெரிய ஓப்பனிங் படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 255 மேற்பட்ட ஸ்கிரீங்களில் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் " நான் நடிகனுக்கு முன்னாடி சினிமாவின் ரசிகன், அதனால் இந்த திரைப்படத்தை நான் முன்னாடி பார்த்துவிட்டேன். அதனால் தான் உங்கள் முன் நான் தைரியமாக பேசிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு கமல், மணி ரத்னம் யாரென்று தெரியாமல் இப்படத்தை  பார்த்தாலும் இப்படம் என்னிடம் பேசியது. பல தடைகள் வந்தாலும் உங்களின் அன்பு என்னை கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடுகிறது" என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com