நானியின் HIT 3 - புது போஸ்டர் வெளியிட்ட படக்குழு

'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
நானியின் HIT 3 - புது போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Published on

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.

பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் டீசரரை படக்குழு அண்மையில் வெளியிட்டது.

போலீஸ் கதாபாத்திரத்தில் நானியை இதில் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ப்ரேம வெல்லுவா பாடலை படக்குழு வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படக்குழு தற்பொழுது புது போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் நானி வாயில் சுருட்டுடன் மற்றும் கயில் துப்பாகியுடன் மாஸாக இருக்கிறார். போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com