`என் படத்துல கிளாமர் இருக்கும் ஆனா அது ஆபாசமாக இருக்காது' - சுந்தர் சி

கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது.வடிவேலு இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
`என் படத்துல கிளாமர் இருக்கும் ஆனா அது ஆபாசமாக இருக்காது' - சுந்தர் சி
Published on

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்துள்ளார்.

இந்நிலையில் கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வடிவேலு இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குநர் சுந்தர் சி " என்னுடைய பட ரசிகர்கள் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் குடும்ப மக்கள் தான். நான் என் படத்தில் வல்காரிட்டியான காட்சிகளை வைத்தது கிடையாது, டபுள் மீனிங் வசனங்களை வைத்தது கிடையாது. நான் கதை எழுதும் போதே இதை தவிர்த்துவிடுவேன். என கதாநாயகிகளை அழகாக காண்பிப்பேன், கதைக்கு பொருந்தாத ஐட்டம் பாடல்களை என் படத்தில் வைத்தது கிடையாது" என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com