ஓ.டி.டி.யில் வெளியானது மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தில் ரயான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்திற்கு ஓஷோ வெங்கட் இசையமைத்துள்ளார்.
ஓ.டி.டி.யில் வெளியானது மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்
Published on

பிரபல யூடியூபர் ஹரி பாஸ்கர், நடிகை லாஸ்லியா இணைந்து நடித்த "மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்" திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் பிக் பாஸ் ரயான் மற்றும் இயக்குநர் இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

திரைப்படம் கடந்த ஜனவரி 24-ம் தேதி வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் ஓடிடியில் வெளியாகி உள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ, ஆஹா, டென்ட் கொட்டா மற்றும் சிம்ப்ளி சவுத் தளங்களில் கண்டுகளிக்க முடியும்.

இந்தப் படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவை குலோதுங்கவர்மன் , இசையை ஓஷோ வெங்கட் மேற்கொண்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com