விஜய் ஆண்டனியின் "ககன மார்கன்"- MOTION POSTER வெளியீடு

விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார்.விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
விஜய் ஆண்டனியின் "ககன மார்கன்"- MOTION POSTER வெளியீடு
Published on

மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `ககன மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் .

அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால்.

ககன மார்கன் படத்தில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் 'காற்றின் வழி பயணிப்பவன்' என்று பொருள்.

விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் வில்லனாக நடித்து இருக்கும் அஜய் தீஷன் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ககன மார்கன் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com