Mega 157 - சிரஞ்சீவி படத்தில் இணைந்த நயன்தாரா

வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம். இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
Mega 157 - சிரஞ்சீவி படத்தில் இணைந்த நயன்தாரா
Published on

கடந்த ஜனவரி மாதம் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம். இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கினார். இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அனில் ரவிபுடி அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்கும் 157 திரைப்படத்தை இயக்குகிறார்.

மெகா 157 திரைப்படத்தின் பூஜை விழா கடந்த மாதம் நடைப்பெற்றது. வித்தியாசமான முறையிலும், நகைச்சுவை கலந்து பூஜை விழாவின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

படத்தை சாகு கரபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் படத்தின் நாயகியாக நயன் தாரா தற்பொழுது இணைந்துள்ளார். இதனை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதற்கு முன் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட்ஃபாதர் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com