விமலின் 'மகாசேனா' படத்திற்கு தேதி குறிச்சாச்சு...

யோகி பாபு, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமலின் 'மகாசேனா' படத்திற்கு தேதி குறிச்சாச்சு...
Published on

'பசங்க' படத்தின் மூலம் அறிமுகமாகி 'களவாணி, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'கலகலப்பு' போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விமல். இவரது நடிப்பில் 'சார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெப் தொடர்கள் மற்றும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இதனிடையே, தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'மகாசேனா'. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மகாசேனா' படத்தின் கதை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சில BTS ஸ்டில்களை பார்க்கும்போது கதை வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், 'மகாசேனா' படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என போஸ்டரை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com