அனிருத் இசையில் சாய் அபயங்கர் குரலில்... 'மதராஸி' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது

சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.சலம்பல பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார்.
அனிருத் இசையில் சாய் அபயங்கர் குரலில்... 'மதராஸி' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது
Published on

சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சலம்பல' பாடல் நாளை வெளியாகவுள்ளது. இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார்.

இந்நிலையில், அனிருத் மற்றும் சாய் அபயங்கர் ஒன்றாக இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனேவே வெளியான இப்பாடலின் ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com