மெட்ராஸ் மேட்னி படக்குழுவை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மெட்ராஸ் மேட்னி படக்குழுவை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்
Published on

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரசியம் எங்கே இருக்கிறது என்ற கேள்வியுடன் நம் அனைவரின் கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு எதார்த்த கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. படத்தை பார்த்த கார்த்திக் சுப்பராஜ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்நிலையில் படத்தை பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படக்குழுவை பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " இப்படத்தை பார்த்தேன் மிகவும் பிடித்து இருந்தது. காளி வெங்கட் அண்ணாவின் அனைத்து திரைப்படங்களும் பிடிக்கும். கூலி திரைப்படத்தின் மூலம் தான் அவரை இன்னும் அதிகமாக புரிந்துக் கொண்டேன். அனைவரும் இப்படத்தை தியேட்டரில் சென்று பார்த்து ஆதரவு கொடுங்கள். அப்பொழுது தான் இம்மாதிரியான திரைப்படங்கள் தொடர்ந்து வரும்" என கூறினார்.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி.கே, இசை கே.சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com