`LIK or DUDE தீபாவளிக்கு எதாவது ஒன்னுதான் ரிலீசாகும்' - பிரதீப் ரங்கநாதன்

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
`LIK or DUDE தீபாவளிக்கு எதாவது ஒன்னுதான் ரிலீசாகும்' - பிரதீப் ரங்கநாதன்
Published on

இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் Lik திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பிரதீப் ரங்கநாதன் "இந்த இரண்டு திரைப்படத்தில் ஏதாவது ஒருத்திரைப்படமே தீபாவளி அன்று வெளியாகும். அது எதுவென பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்த தீபாவளி நம்ம தீபாவளி தான்" என கூறினார்.

தீபாவளி அன்று எந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com