ஆரம்பிக்கலாமா.. 'ஜனநாயகன்' முதல் பாடல் அப்டேட் - ரசிகர்கள் குஷி

விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும்Lets begin என்ற தலைப்பில் போஸ்டர் ஒன்றை 'ஜன நாயகன்' படக்குழு வெளியிட்டது.
ஆரம்பிக்கலாமா.. 'ஜனநாயகன்' முதல் பாடல் அப்டேட் - ரசிகர்கள் குஷி
Published on

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இன்று மதியம் Lets begin என்ற தலைப்பில் போஸ்டர் ஒன்றை 'ஜன நாயகன்' படக்குழு வெளியிட்டது. இதனால் ஜனநாயகம் அப்டேட் கேட்டு கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் குஷியில் இருந்தனர்.

இந்நிலையில் ஜனநாயகன் முதல் பாடல் வரும் நவம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு புது போஸ்டர் வெளியிட்டுள்ளது. இந்த பாடல் விஜய் குரலில் இருக்கும் என கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com