இருள் மறையட்டும் எம்புரான் வருகிறான் - அப்டேட் கொடுத்த படக்குழு

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இருள் மறையட்டும் எம்புரான் வருகிறான் - அப்டேட் கொடுத்த படக்குழு
Published on

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த பாகத்தையும் நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி மலையாளம்,தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழு ஒரு சுவாராசிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் முதல் நாள் முதற்காட்சி அதிகாலை 6 மணிக்கு தொடங்கும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் முதல் பாகமான லூசிஃபர் படத்தை வரும் மார்ச் 20 ஆம் தேதி ரீரிலீஸ் செய்யவுள்ளனர்.

படத்தை குறித்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com