#Vijay விஜய் - திரிஷா பற்றி அப்படி சொன்னேனா - லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்

மரியாதையான, அமைதியான, மென்மையான இணை நடிகராக மட்டுமே அவரை அறிந்துள்ளேன். அவருடைய தாயார் மீது மிகுந்த மரியாதை உள்ளது.
#Vijay விஜய் - திரிஷா பற்றி அப்படி சொன்னேனா - லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்
Published on

கடந்த சில நாட்களாகவே விஜய்-திரிஷா விவகாரம், ஒட்டுமொத்த அரசியல் மற்றும் சினிமா களத்தை பரபரப்பாக்கி வருகிறது. இதற்கிடையில் விஜய் குறித்து நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சித்ததாக, சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனை லட்சுமி ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், "விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றியும், அவருடைய அரசியல் வருகை பற்றியும் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. மரியாதையான, அமைதியான, மென்மையான இணை நடிகராக மட்டுமே அவரை அறிந்துள்ளேன். அவருடைய தாயார் மீது மிகுந்த மரியாதை உள்ளது.

சமீபத்தில் நான் ஒரு மேடையில் பேசிய சில வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, விஜய்யின் அரசியல் வருகைக்கும் இப்போது பேசப்படும் தனிப்பட்ட விஷயங்களுக்கும் தவறாக இணைக்கப்பட்டு உள்ளன. இது தேர்தல் காலம் என்பதால் இந்த விஷயம் அளவுக்கு மீறி பெரிதாக்கப்படுகிறது. என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஏற்பட்ட தவறான புரிதலை சரி செய்யவும் இதை சொல்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com