குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியானது

குமாரசம்பவம் திரைப்படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் ஒரு ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.
குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

குமாரசம்பவம் படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் தற்பொழுது வெள்ளி திரையில் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.

இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ஒரு ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை வீனஸ் இன்ஃபொடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com