புற்றுநோயுடன் போராடி வந்த KGF பட நடிகர் மரணம்

காசிம் பாய் கதாபாத்திரத்தில் ஹரீஸ் ராய் தோன்றினார். 1995 இல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன சிவராஜ் குமாரின் 'ஓம்' படத்தில் டான் ராய் என்ற கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார்.
புற்றுநோயுடன் போராடி வந்த KGF பட நடிகர் மரணம்
Published on

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018 இல் வெளியான படம் கேஜிஎஃப். இந்திய அளவில் மிகப்பெறிய வெற்றியை இப்படத்தின் 2ஆம் பாகம் 2022 இல் வெளியானது. இந்த 2 படத்திலும் காசிம் பாய் கதாபாத்திரத்தில் தோன்றி கவனம் பெற்றவர் ஹரீஸ் ராய்.

கேஜிஎஃப் மூலம் பரிட்சயமானவராக இருந்தாலும் கன்னட சினிமாவில் பல படங்களில் தோன்றியிருக்கிறார்.

குறிப்பாக 1995 இல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன சிவராஜ் குமாரின் 'ஓம்' படத்தில் டான் ராய் என்ற கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயுடன் ஹரீஸ் ராய் போராடி வந்தார்.

இந்நிலையில் தைராய்டு புற்றுநோய் வயிறு வரை பரவியதால் அவர் பெங்களூருவில் உள்ள கித்வாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நவம்பர் 6) அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 55.

 முன்னதாக ஒரு நேர்காணலில் தனது நோய் குறித்து பேசியிருந்த ஹரிஷ் ராய், கேஜிஎஃப் படத்தில் தாடியுடன் தோன்றியதற்கான காரணத்தை விளக்கினார்.

"புற்றுநோய் என் தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வீக்கத்தை மறைக்க நான் தாடியை வளர்த்தேன். "யாரும் விதியிலிருந்து தப்பிக்க முடியாது" என்று அவர் தெரிவித்திருந்தார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு  தனது சிகிச்சை செலவுகள் குறித்து அவர் கூறுகையில், 'ஒரு ஊசியின் விலை 3.55 லட்சம் ரூபாய், மருத்துவர்கள் 63 நாட்களில் 3 ஊசிகள் போட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர், அதன் விலை சுமார் 10.5 லட்சம் ரூபாய்' என்று கூறி நிதி உதவி கோரியிருந்தார்.

இந்நிலையில் அவரின் மறைவு கன்னட திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com