

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்துவிட்டது. இப்படத்தின் பெயர் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
கதை நாயகியாக ரகு தாத்தா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில், ரிவால்வர் ரீட்டா படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, ரிவால்வர் ரீட்டா படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிவால்வர் ரீட்டா திரைப்படம் வரும் ஆகஸ்டு 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.
#RevolverRita New Poster?Stars : Keerthy Suresh - RadhikaMusic : Sean Roldan (Good Night)Direction : K Chandru (Naveena Saraswathi Sabatham)August 27 Theatrical Release!! pic.twitter.com/RggrpfFI0C