இளம் இயக்குநர்களுடன் ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்பராஜ் பதிவிட்ட போட்டோ வைரல்

படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படம் ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் இயக்குநர்களுடன் ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்பராஜ் பதிவிட்ட போட்டோ வைரல்
Published on

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பூஜா ஹெக்டே இந்த படத்தில் குத்து பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத், சென்னை மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படமானது ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குநர் சுப்பராஜ் புகைப்படத்தை பகிர்ந்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இப்புகைப்படத்தை எடுப்பதற்கு முன்பு, தலைவர் எங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே தனது பாணியில் 'பேட்ட கூலி ஜெயிலர்' என்றார்.. லவ் யூ தலைவா என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட, நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்', தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படம் என இளைய தலைமுறை இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com