HIT 3 படத்தில் நடிக்கும் கார்த்தி?

ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
HIT 3 படத்தில் நடிக்கும் கார்த்தி?
Published on

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.

பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் டீசரரை படக்குழு அண்மையில் வெளியிட்டது.

போலீஸ் கதாபாத்திரத்தில் நானி இப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ப்ரேம வெல்லுவா பாடலை படக்குழு வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தில் நடிகர் கார்த்தி கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஹிட் 4 படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். இதனால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுக்குறித்த அதிகார்ப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com