அருண்குமார் இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்கும் கமல்? ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்தார் ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார்.
அருண்குமார் இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்கும் கமல்? ஹீரோ யார் தெரியுமா?
Published on

'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்தார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார்.

திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. தற்பொழுது இயக்குநர் எஸ்.யு அருண்குமார் அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நாயகன் யாரென்று பேச்சு வார்த்தை நடப்பது போன்ற செய்திகள் பரவி வருகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com