வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதாநாயகி இவரா? - வெளியான தகவல்

சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து படம் இயக்கவுள்ளார்.
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதாநாயகி இவரா? - வெளியான தகவல்
Published on

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில், இந்தப் படம் வசூல் ரீதியில் பட்டையை கிளப்பியது.

இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து படம் இயக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனால் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் ஒரு டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது.இப்படமும் அவரது பாணியில் நகைச்சுவையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயன் - கல்யாணி இருவரும் ஹீரோ படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com