ஜன நாயகன் Vs ராஜாசாப் :விஜயுடன் மோதும் பிரபாஸ்!

பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது.
ஜன நாயகன் Vs ராஜாசாப் :விஜயுடன் மோதும் பிரபாஸ்!
Published on

பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் இப்படத்தின் பாகம் இரண்டிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

அடுத்ததாக மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வீடியோவை சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

திரைப்படம் அடுத்தாண்டு சங்கிராந்தியை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது.

இப்படம் ரிலீசாகும் அதே நாளில் விஜய்யின் கடைசி திரைப்படம் என கூறப்படும் ஜன நாயகன் திரைப்படமும் வெளியாகிறது. இதனால் இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களும் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர்.

தி ராஜா சாப் படத்தில் பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com