தளபதி திருவிழா... மலேசியாவில் திரண்ட திரைப்பிரபலங்கள்

கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது.‘தளபதி திருவிழா’ என்ற கார் கோலாலம்பூரில் வலம் வருகிறது.
தளபதி திருவிழா... மலேசியாவில் திரண்ட திரைப்பிரபலங்கள்
Published on

நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் உள்ளது என்றால் அது மிகையல்ல...

இதனால் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் மலேசியாவில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மலேசியா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன், பாடகர்கள், எஸ்.பி.பி. சரண், கிரிஷ், ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு, பாடகிகள் அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் வீடியோ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவர்களை தவிர நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், 'தளபதி திருவிழா' என்ற கார் கோலாலம்பூரில் வலம் வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com