'கமல் 237' படத்திற்கு இசையமைக்கும் ஜேக்ஸ் பிஜாய்.. தொழில்நுட்ப குழுவை அறிவித்த அன்பறிவ்!

கேஜிஎப் சண்டைக் காட்சிகளுக்காக தேசிய விருது பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் கமலின் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்கள்.படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிப்பார் என்றும் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது. படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிப்பார் என்றும் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.
'கமல் 237' படத்திற்கு இசையமைக்கும் ஜேக்ஸ் பிஜாய்.. தொழில்நுட்ப குழுவை அறிவித்த அன்பறிவ்!
Published on

கமல் 237-ஆவது படத்தினை பிரபல சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவ்(அன்புமணி, அறிவுமணி) சகோதர்கள் இயக்குகிறார்கள்.

கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க மலையாள இயக்குநர் ஷ்யாம் புஷ்கரன் திரைக்கதையில் இப்படம் உருவாக உள்ளது.

கேஜிஎப் சண்டைக் காட்சிகளுக்காக தேசிய விருது பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் கமலின் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாவது அனைவரிடையே கவனம் பெற்றது.

படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிப்பார் என்றும் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் கமல் 237 படத்தின் தொழில்நுட்ப குழுவை படக்குழு அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி, ஜேக்ஸ் பிஜோய் இப்படத்திற்கு இசையமைப்பதாகவும், சுனில் கே.எஸ். ஒளிப்பதிவு செய்வதாகவும் ஷெமீர் கே.எம். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்வதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசையில் கடைசியாக வெளியான லோகா படம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இவர்களுடன் இணைந்து கமல் எடுத்துக்கொண்ட புகைப்படங்ளும் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com