முடிவுக்கு வருகிறதா 'ஜன நாயகன்' தணிக்கை இழுபறி? ஜன. 27-ல் உயர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு!

ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது.
முடிவுக்கு வருகிறதா 'ஜன நாயகன்' தணிக்கை இழுபறி? ஜன. 27-ல்  உயர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு!
Published on

ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. முன்னதாக படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து ஜன.20 அன்று ஜன நாயகன் வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அன்று தயாரிப்பு நிறுவனம், தணிக்கை வாரியம் என இருதரப்புகளும் மாறி மாறி தங்கள் வாதங்களை முன்வைத்தன. நீதிபதிகளும் பல்வேறு கேள்விகளை இருதரப்பினரிடமும் எழுப்பினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தநிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம். இதனால் ஜன நாயகன் வெளியீடு இன்னும் தள்ளிப்போகும் சூழல் உருவானது.

இந்நிலையில்  இந்த வழக்கில் வரும் ஜன.27ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம். காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக தலைமை நீதிபதி அமர்வு ஜன நாயகன் தணிக்கை வழக்கை விசாரிக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com