8 மாதத்தில் 42 கிலோ எடை குறைத்தேன்..! தனது ஃபிட்னஸ் குறித்து மனம்திறந்த அஜித்

நான் வருடத்திற்கு 1 சிறப்பான தரமான படங்களில் கண்டிப்பாக நடிப்பேன்.ஒரு டீடோட்லராகவும், சைவ உணவுகளை மட்டுமே உண்பவனாகவும் மாறினேன்.
8 மாதத்தில் 42 கிலோ எடை குறைத்தேன்..! தனது ஃபிட்னஸ் குறித்து மனம்திறந்த அஜித்
Published on

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு அடுத்து அஜித் மீண்டும் அவரது ரேஸிங் போட்டியில் தற்பொழுது ஈடுப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " எனக்கு கிடைத்த இயக்குநர்களும் , தயாரிப்பார்களுக்காக நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அவர்கள் என்னோட தொலை நோக்கு பார்வையை புரிந்துக் கொள்கின்றனர்.

நான் வருடத்திற்கு 1 சிறப்பான தரமான படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். என்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது, அடுத்த வருட கோடை விடுமுறைக்கு திரைப்படம் வெளியாகும்.

ரேசிங் சீசனில் நான் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன். ஒரு விஷயத்தை முழு கவனத்துடன் செயல்படுத்த விரும்புகிறேன் என்றார்.

மேலும், தான் உடல் எடை குறைத்தது தொடர்பாக அஜித் குமார் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில்,"ரேஸிங்கிற்குள் வரவேண்டும் என்று முடிவெடுத்தவுடன், நான் மீண்டும் உடல் உறுதியுடன் இருக்க வேண்டும் என நினைத்தேன்.

இதற்காக கடந்த 8 மாதங்களில் டயட், உடற்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி ஆகியவற்றின் மூலம் 42 கிலோ எடையை குறைத்தேன்.

ஒரு டீடோட்லராகவும், சைவ உணவுகளை மட்டுமே உண்பவனாகவும் மாறினேன்.

என்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் சி ரேஸிங்கிற்காக அளிக்க வேண்டியுள்ளது. அதைதான் நான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com