`மகாவதார் நரசிம்மா'பார்த்து பல காட்சிகளில் அழுதேன் - ராகவா லாரன்ஸ்

அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மஹா அவதார் நரசிம்ஹா கடந்த வாரம் வெளியானது.திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
`மகாவதார் நரசிம்மா'பார்த்து பல காட்சிகளில் அழுதேன் - ராகவா லாரன்ஸ்
Published on

அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மஹா அவதார் நரசிம்ஹா கடந்த வாரம் வெளியானது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.

திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. திரைப்படம் இதுவரை 120 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பலரும் இப்படத்தை கடவுள் தரிசனமாக நினைத்து கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். ஒரு அனிமேஷன் திரைப்படத்திற்கு இந்தளவு வசூலித்த படம் இதுவே.

இந்நிலையில் படத்தை நடிகர் மற்றும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அவரது குடும்பத்துடன் சென்று பார்த்து படத்தை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் "மகாவதார் நரசிம்ம படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

எனது குடும்பத்தினருடன் எனக்கு ஒரு சக்திவாய்ந்த சினிமா அனுபவம் கிடைத்தது. நான் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாகவே பார்த்தேன். ஒரு பக்தனாக, படத்துடன் ஆழமாக இணைய முடிந்தது, மேலும் பல காட்சிகளில் அது எனக்கு கண்ணீர் வரவழைத்தது. இந்த பார்வையை உயிர்ப்பித்ததற்காக இயக்குனர் அஷ்வின்,தயாரிப்பாளர் hombalefilms மற்றும் முழு குழுவினருக்கும் எனது மிகப்பெரிய நன்றி. குழு தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன். #குருவேசரணம் என பதிவிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் புல்லட் திரைப்படம் உருவாகியுள்ளது மேலும் பென்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com