HIT 3 திரைப்படம் அனிமல் & மார்கோ படங்களை போல் இருக்காது - நானி

ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
HIT 3  திரைப்படம்  அனிமல் & மார்கோ படங்களை போல் இருக்காது - நானி
Published on

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.

பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் நடிகர் கார்த்தி கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. திரைப்படம் வெளியாக இன்னும் 7 நாட்கள் மட்டும் இருக்க நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மும்பையில் படக்குழு ப்ரோமோஷன் செயதனர்.

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் நானி " இப்படத்தின் டிரெய்லரை பார்த்து மக்கள் அதிகப்பேர் திரைப்படம் மார்கோ மற்றும் அனிமல் திரைப்படத்தை போல் வயலன்ஸ் அதிகமாக இருக்கிறது என கூறினர். ஆனால் இப்படம் அனிமல் மற்றும் மார்கோ திரைப்படத்தை போல் கிடையாது. ஹிட் 3 முற்றிலும் மாறுப்பட்ட கதைக்களமாகும். அடுத்தடுத்து என்ன நடக்கும் என திரைக்கதை சுவாரசியமாக இருக்கும் " என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com