நேரடியாக ஓ.டி.டி.-யில் வெளியாகும் ஜி.வி. பிரகாஷின் 'லக்கி'!

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமல் போன தனது நாயைத் தேடி அலைகிறார் ஜி.வி.பிரகாஷ்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரே இசையமைத்துள்ளார்.
நேரடியாக ஓ.டி.டி.-யில் வெளியாகும் ஜி.வி. பிரகாஷின் 'லக்கி'!
Published on

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'லக்கி' திரைப்படம் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமல் போன தனது  நாயைத் தேடி அலைகின்ற ஒரு இளைஞனைப் பற்றிய கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து அனஸ்வர ராஜன், மேக்னா சுமேஷ், இளங்கோ குமரவேல், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரே இசையமைத்துள்ளார். கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர்.

படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாவதால், பாடல்கள் அனைத்தும் இம்மாதத்திலேயே ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com