அடுத்தடுத்து அஜித் படம்- 'குட் பேட் அக்லி' படத்தின் ரிலீஸ் அப்டேட்

'விடாமுயற்சி' படமும் ஒரு சில காரணங்களால் பொங்கல் பண்டிகையில் வெளியாகவில்லை.பொங்கல் பண்டிகையில் அஜித்தின் இரு படங்களும் வெளியாகாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
அடுத்தடுத்து அஜித் படம்- 'குட் பேட் அக்லி' படத்தின் ரிலீஸ் அப்டேட்
Published on

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம் ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அஜித்தின் மற்றொரு படமான 'விடாமுயற்சி' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்ததால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால் தற்போது 'விடாமுயற்சி' படமும் ஒரு சில காரணங்களால் பொங்கல் பண்டிகையில் வெளியாகவில்லை.

இந்த நிலையில், 'குட் பேட் அக்லி' படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் கோடை கால விடுமுறையையொட்டி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகையில் அஜித்தின் இரு படங்களும் வெளியாகாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com