இந்த அருமையான படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள் - மெட்ராஸ் மேட்னி படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த அருமையான படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள் - மெட்ராஸ் மேட்னி படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்
Published on

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரசியம் எங்கே இருக்கிறது என்ற கேள்வியுடன் நம் அனைவரின் கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு எதார்த்த கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்த கார்த்திக் சுப்பராஜ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் படம் குறித்து அவர் " இப்படம் மனதிற்கு இதம் தரும் திரைப்படமாக உருவாகியுள்ளது, காளி வெங்கடின் நடிப்பு பிரமாதம். இந்த அற்புதமான திரைப்படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள்" என கூறியுள்ளார்.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி.கே, இசை கே.சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com