33 வருட சினிமா வாழ்க்கையின் முதல் தேசிய விருது : ஷாருக் கான் நெகிழ்ச்சி பதிவு

கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது.திரைப்படம் 1148 கோடி ரூபாய் வசூலித்தது.
33 வருட சினிமா வாழ்க்கையின் முதல் தேசிய விருது : ஷாருக் கான் நெகிழ்ச்சி பதிவு
Published on

கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ஷாருக் கான் இரு வேடங்களில் நடித்திருப்பார். இவருடன் விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, நயன்தாரா, பிரியாமணி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. திரைப்படம் 1148 கோடி ரூபாய் வசூலித்தது.

நேற்று 71-வது தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்தனர் அதில் சிரந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் ஜவான் திரைப்படத்திற்காக வென்றுள்ளார். இதுவே அவர் வாங்கும் முதல் தேசிய விருதாகும்.

தன் திரைப்பயணத்தை 1992 ஆம் ஆண்டு தீவானா என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருகு தேசிய விருதை கொடுத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com