மோகன்லால் நடித்துள்ள "விருஷபா" படத்தின் First Look போஸ்டர் வெளியீடு

நந்தா கிஷோர் இயக்கிய "விருஷபா" படத்தின் படப்பிடிப்பு நிறைவு.விருஷபா திரைப்படம் வரும் தீபாவளி முன்னிட்டு அக்டோர் 16ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.
மோகன்லால் நடித்துள்ள "விருஷபா" படத்தின் First Look போஸ்டர் வெளியீடு
Published on

கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் பான் இந்தியா படம், 'விருஷபா'.

இதில், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ராகிணி திவேதி, நேகா சக்ஸேனா, சஹ்ரா எஸ் கான் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஏ.வி.எஸ் ஸ்டுடியோ சார்பில் அபிஷேக் வியாஸ், பர்ஸ்ட் ஸ்டெப் மூவிஸ் சார்பில் ஷியாம் சுந்தர், பாலாஜி டெலிபிலிம்ஸ் சார்பில் ஏக்தா கபூர், கனெக்ட் மீடியாவுக்காக வருண் மாத்தூர் இணைந்து தயாரிக்கின்றனர்.

"விருஷபா" திரைப்படம் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராகவும், அப்பா- மகன் இடையிலான உறவை மையப்படுத்தியும் இப்படம் தயாராவதாகவும் கூறப்படுகிறது.

மது பிரசாந்த் பிள்ளை இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக மோகன்லால் தெரிவித்திருந்தார்.

இந்த திரைப்படம் வரும் தீபாவளி முன்னிட்டு அக்டோர் 16ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருஷபா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com