மோகன் ஜி இயக்கும் திரௌபதி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு !

செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார்.
மோகன் ஜி இயக்கும் திரௌபதி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு !
Published on

2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.

கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

மோகன் ஜி அடுத்து இயக்கும் திரௌபதி 2 படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 10.58 மணிக்கு வெளியிட இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com