குடும்பங்களுக்கு பிடித்த ப்ளாக்பஸ்டரான தலைவன் தலைவி - வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
குடும்பங்களுக்கு பிடித்த ப்ளாக்பஸ்டரான தலைவன் தலைவி - வசூல் எவ்வளவு தெரியுமா?
Published on

'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கணவன் மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.

இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 25-ந்தேதி வெளியான 'தலைவன் தலைவி' படம் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. படம் வெளியான உலக அளவில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் குவித்துள்ளது. மேலும் தமிழ் நாட்டில் மட்டும் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனால் தலைவன் தலைவி திரைப்படம் ஒரு ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக உருமாறியுள்ளது. இதனால் படக்குழு, தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com