புதுப்பட அப்டேட்டை வெளியிட்ட இயக்குநர் ரத்னகுமார்

‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது.
புதுப்பட அப்டேட்டை வெளியிட்ட இயக்குநர் ரத்னகுமார்
Published on

2017-ம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்ன குமார். இதன்பின் இவர் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.

இதனை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீஸ்குவாட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார். இப்படம் தொடர்பான எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில், சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த நிலையில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கி வரும் புதிய படத்தின் ஃபர்ஸ் லுக் மற்றும் தலைப்பு நாளை மதியம் 1.29 மணிக்கு வீடியோவுடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com