மறைந்த சண்டை பயிற்சியாளர் குடும்பத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி

படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.பட காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் ஈடுபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
மறைந்த சண்டை பயிற்சியாளர் குடும்பத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி
Published on

நாகை மாவட்டம், கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

இந்த காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) ஈடுபட்டு அதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், வேட்டுவம் பட ஷூட்டிங்கில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜுவின் குடும்பத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com