மாரீசன் மக்களை கவர்ந்ததா? படத்தின் 3 நாள் வசூல் விவரம்

வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மாரீசன் மக்களை கவர்ந்ததா?  படத்தின் 3 நாள் வசூல் விவரம்
Published on

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஒரு மறதி நோயாளிக்கும் திருடனுக்கும் உள்ள பயணத்தை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. படத்தின் 3 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன் படி திரைப்படம் 3 நாட்களில் 3.5 கோடி ரூபாய் இந்தியா அளவில் வசூலித்துள்ளது.

இப்படத்துடன் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெளியானது. அப்படம் முதல் நாளிலே 4.5கோடி ரூபாய் வசூலை பெற்றது. அதனை ஒப்பிடும் போது மாரீசன் திரைப்படத்திற்கு மக்கள் குறைவாகவே செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com