"பன் பட்டர் ஜாம்" படத்தின் டிரெய்லர் வெளியீடு

பன் பட்டர் ஜாம் திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.படத்தின் மூன்றாம் பாடலான காஜுமா பாடலை படக்குழு வெளியிட்டனர்.
"பன் பட்டர் ஜாம்" படத்தின் டிரெய்லர் வெளியீடு
Published on

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.

மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.

படத்தின் தியா தியா பாடலை சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் படத்தின் ஸ்டீலர் காட்சியை படக்குழு வெளியிட்டது.

அதை தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாடலான காஜுமா பாடலை படக்குழு வெளியிட்டனர்.

இந்நிலையில், பன் பட்டர் ஜாம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com