பைசன் படத்தை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - நன்றி தெரிவித்து மாரி செல்வராஜ் பதிவு

கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது. பைசன் படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது
பைசன் படத்தை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - நன்றி தெரிவித்து மாரி செல்வராஜ் பதிவு
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது.

இந்நிலையில், பைசன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் ஹீரோ துருவ் விக்ரமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவை பகிர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பதிவில், "என் முதல் படமான பரியேறும் பெருமாளில் ஆரம்பித்து கர்ணன், மாமன்னன், வாழை இப்போது பைசன் வரை என் மீதும் என் படைப்பின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்து ஆர்வமாய் பார்த்து நேரில் அழைத்து என்னை உச்சிமுகர்ந்து கொண்டாடும் உங்களின் அத்தனை பேரன்பிற்கும் பெரும் பிரியத்திற்கும் என் இதயத்திலிருந்து கசிந்துருகும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com