Bigg Boss Season 9: இந்த வாரம் டபுள் எவிக்ஷன் - வெளியேறிய 2 போட்டியாளர் யார்?

இந்த வாரம் நடைபெற்ற ஹோட்டல் டாஸ்கின் விருந்தினராக பழைய போட்டியாளர்கள் களமிறக்கினர்.சாண்ட்ரா தனக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்தார்.
Bigg Boss Season 9: இந்த வாரம் டபுள் எவிக்ஷன் - வெளியேறிய 2 போட்டியாளர் யார்?
Published on

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் 3 ஆம் வாரத்தில் ஆதிரையும் 4 ஆம் வாரத்தில் கலையரசனும் வெளியேற்றப்பட்டனர்.

கடந்த வாரம் லக்சரி ஹவுஸ் கிடையாது என்றும் அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்று புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது.

இந்த வாரம் நடைபெற்ற ஹோட்டல் டாஸ்கின் விருந்தினராக பழைய போட்டியாளர்கள் களமிறக்கினர். இதில் தீபக், பிரியங்கா, மஞ்சரி ஆகியோர் பங்கேற்றனர். உள்ளே வந்த அவர்கள், போட்டியாளர்களின் செயல்களுக்கு ஸ்டார் கொடுத்தார்கள். வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த சாண்ட்ரா தனக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க்கை முடித்து பிக்பாஸ் வீட்டர்களை அழவைத்து சம்பவம் செய்தார்.

இந்த வார எவிக்ஷன் பட்டியலில் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் தவிர மற்ற பெரும்பாலான போட்டியார்கள் இடம் பெற்றிருந்த நிலையில், துஷார் இந்த வாரம் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த டபுள் எவிக்ஷன் நடந்ததாகவும் அதில் 2 ஆவது நபராக பிரவீன் வெளியேற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com