பாரதிராஜா நடித்த `நிறம் மாறும் உலகில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.ந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
பாரதிராஜா நடித்த `நிறம் மாறும் உலகில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு கடந்த மாதம் அறிவித்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com